ஓய்வு பெற்ற பேராசிரியர் K. சொக்கலிங்கம், பல்வேறு குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்களின் மன நிலை குறித்த ஆய்வியல் துறைக்கு அவர் ஆற்றிய மிகப்பெரும் பங்களிப்பிற்காகப் பெரு மதிப்புமிக்க ஹான்ஸ் வான் ஹென்டிக் என்ற விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலக் கட்டத்தில் 32,909 மில்லியன் அலகுகளாக இருந்த தமிழகத்தின் மின் நுகர்வு 2024 ஆம் ஆண்டின் அதே காலக் கட்டத்தில் 7% அதிகரித்து 35,385 மில்லியன் அலகுகளாக அதிகரித்துள்ளது.
சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தின் அவாத் நகரில் மூன்று நாட்கள் அளவிலான மாம்பழத் திருவிழாவானது நடைபெற்றது.
X தளத்தில் நரேந்திர மோடி அவர்களின் சமூக ஊடகப் பக்கத்தினைப் பின் தொடரச் செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியதையடுத்து, இவர் மிக அதிகமாக பின் தொடரப்படும் உலகத் தலைவர் ஆக விளங்குகிறார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா) நகரில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்க மணல் சிற்ப ஆசான் (மாஸ்டர்) விருதினை வென்று உள்ளார்.
நீதிபதி ஆலியா நீலும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.