TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 17 , 2024 129 days 220 0
  • மத்திய அரசானது, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தினை வெளியிட்டுள்ளது.
  • ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியன் என்ற அரங்கில் நடைபெற்ற ஐரோப்பிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டு அணியானது இங்கிலாந்து அணியினை வீழ்த்தி தனது நான்காவது கோப்பையை வென்றது.
  • அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கொலம்பியா அணியினை வீழ்த்தி அர்ஜென்டினா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மற்றும் தனது 16வது கோப்பையினை வென்றுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆந்திரப் பிரதேச சமூக மேலாண்மையின் கீழான இயற்கை வேளாண்மை (APCNF) முன்னெடுப்பானது, 2024 ஆம் ஆண்டின் மனித நேயத்திற்கான குல்பென்கியன் விருதை வென்றுள்ளது.
  • இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சாம்பியன்கள் அணியினை வென்றது.
  • 1975 ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட ஜூன் 25 ஆம் தேதியானது, இனி சம்விதான் ஹத்யா திவாஸாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
  • நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான KP சர்மா ஒலி என்பவர்  நான்காவது முறையாக நேபாளத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் (LRS) கீழ் குஜராத்தில் உள்ள GIFT நகரில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையங்களில் (IFSCs) இந்தியாவில் வசிப்பவர்களும் வெளிநாட்டு நாணயக் கணக்கை (FCA) துவக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்