2024 ஆம் ஆண்டு மதிப்புமிக்க வேளாண்மைக்கான தலைமைத்துவ விருது விழாவில் தோட்டக் கலைத் துறையில் மிகவும் சிறந்து விளங்கும் மாநிலமாக நாகாலாந்து தேர்வு செய்யப் பட்டுள்ளது.
இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, இங்கிலாந்தின் இலண்டன் நகரில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) 132வது அமர்வில் பங்கேற்றது.
அடுத்த ஐந்தாண்டுகளில் ஹூவாவே மற்றும் ZTE ஆகிய சீன நிறுவனங்கள் தயாரித்த கூறுகளை ஜெர்மனி தனது 5G கம்பியில்லாத இணையச் சேவை வலையமைப்பில் இருந்து அகற்ற உள்ளது.