TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2024 4 hrs 0 min 11 0
  • இந்திய அரசானது, பொது விமானப் போக்குவரத்து தொடர்பான இரண்டாவது ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டினை செப்டம்பர் மாதம் நடத்தவுள்ளது.
  • தென் கொரிய நாடானது முதன்முறையாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சி மாநாட்டினை பூசன் நகரில் நடத்த உள்ளது.
  • துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆனது முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மின்சாரப் படகின் சோதனை நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதிஷ் சிங், 19 மணி நேரத்தில் மலேசியாவின் கினாபாலு மலையில் ஏறி மாபெரும் சாதனையினைப் படைத்துள்ளார்.
  • கிழக்கு இந்தியாவில் முதல் முறையாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஒரு பிரத்தியேக பல்கலைக் கழகத்தினை ராஞ்சியில் நிறுவ ஜார்க்கண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (BIMSTEC) 2வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
  • ICICI புருடென்ஷியல் பரஸ்பர நிதியம் ஆனது, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ICICI புருடென்ஷியல் நிஃப்டி எண்ணெய் & எரிவாயு ETF எனப்படும் இந்தியாவின் முதல் வகை பரிவர்த்தனை வர்த்தக நிதியினை (ETF) அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்