TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2018 2149 days 660 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது, உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய குறிகாட்டிகள் மற்றும் அளவுருக்களின் அடிப்படையில், புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கான கல்வி நிறுவனங்களை வரிசைப்படுத்தும் பொருட்டு புதிய கண்டுபிடிப்பு சாதனைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கான அடல் தரவரிசைப் பட்டியலை (Atal Ranking of Institutions on Innovation Achievements -ARRIA) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது, நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் புத்தாக்கத்திற்கான கலாச்சாரத்தை முறையாக ஊக்குவிக்கும் பொருட்டு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் வளாகத்தில், “புத்தாக்கத் துறை” ஒன்றைத் துவக்கியுள்ளது.
  • 6வது விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் (Regional Comprehensive Economic Partnership- RCEP) வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கான இந்தியக் குழுவிற்கு, மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை தாங்கினார்.
    • இந்த சந்திப்பானது, 10 ஆசியான் நாடுகளையும் 6 ஆசியான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பங்குதாரர்களையும் உள்ளடக்கியது ஆகும். அவை முறையே இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகும்.
  • நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்குவதன் ஒரு பகுதியாக, ஜெர்மனி, இந்தியாவிற்கு 120 மில்லியன் யூரோக்களை (சுமார் 990 கோடி) கடனாக வழங்கவுள்ளது.
    • இந்த நிதியானது, உத்தரகாண்டில் கழிவுநீர் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிர்மாணிப்பது மற்றும் தற்போது உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளை மறுசீரமைப்பு செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்படும்.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது, கர்நாடகாவின் கர்நாடகா மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (Karnataka state high ways Improvement III Project- KSHIP III) நிதியளிப்பதற்காக 346 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியானது கர்நாடகாவின் 12 மாவட்டங்களில் உள்ள பொருளாதார மையங்களின் இணைப்பு மற்றும் அணுகலை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
  • இந்தியா, மியான்மரின் எல்லைகளை ஒட்டி உள்ள மிசோரமில் குடியேற்ற சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. இது கிழக்கத்திய அண்டை நாடுகளுடன் வளர்ந்து வரும் நெருங்கிய உறவின் பிரதிபலிப்பாகும்.
  • முறையான பயண ஆவணங்களுடன் மியான்மருக்கு உள்ளேயோ அல்லது வெளியே செல்லும் பயணிகள் இந்தியாவில் நுழைவதற்கோ அல்லது வெளியேறவோ, அங்கீகாரம் பெற்ற குடியேற்ற மையமாக மிசோரத்தில் ‘சோக்காவ்தார்’ இந்தியா சோதனைச் சாவடியை நிறுவியுள்ளது.
  • சவுதி அரேபியாவில் வெளியிடப்படும் முதல் பாலிவுட் படமாக அக்ஷய் குமார் நடித்த “கோல்டு” படம் அமைந்துள்ளது.
  • எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது, மழலையர் வகுப்புகளை, பொது மற்றும் தனியார் கூட்டிணைவின் (PPP) மூலமாக நடத்தப்பட உள்ளது. இதன் மூலம், இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ள 32 பள்ளிகளில் மாநிலத்தின் முதலாவதாக இப்பள்ளி உருவெடுத்துள்ளது. இது பல இடர்களுக்கிடையே மாநில அரசால் வழங்கப்படுகின்ற கல்வியில் ஈடுபாட்டை அதிகரிப்பதையும் மாணவர் சேர்க்கைகளை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்