TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 23 , 2024 42 days 161 0
  • இந்திய வானியற்பியல் அறிவியலாளர் பிரஹலாத் சந்திர அகர்வாலுக்கு தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற 45வது COSPAR அறிவியல் பேரவையில் 2024 ஆம் ஆண்டிற்கான COSPAR ஹாரி மெஷ்ஷே விருது வழங்கப்பட்டது.
  • பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீ குரும்பா கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனம் ஆனது, 2024 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு முயற்சிகள் என்ற விருதினைப் பெற்றுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு இந்தியக் கைபேசி மாநாட்டின் (IMC) கருத்துருவாக "The Future is Now" என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்திய ஆடவர் தேசியக் கால்பந்து அணியானது சமீபத்தில் வெளியிடப்பட்ட FIFA தரவரிசையில் 124 வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயன் மேலும் ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார்.
  • ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே 99 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் நான்காவது முறையாக மீண்டும் அந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்