இந்திய வானியற்பியல் அறிவியலாளர் பிரஹலாத் சந்திர அகர்வாலுக்கு தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற 45வது COSPAR அறிவியல் பேரவையில் 2024 ஆம் ஆண்டிற்கான COSPAR ஹாரி மெஷ்ஷே விருது வழங்கப்பட்டது.
பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீ குரும்பா கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனம் ஆனது, 2024 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு முயற்சிகள் என்ற விருதினைப் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்தியக் கைபேசி மாநாட்டின் (IMC) கருத்துருவாக "The Future is Now" என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ஆடவர் தேசியக் கால்பந்து அணியானது சமீபத்தில் வெளியிடப்பட்ட FIFA தரவரிசையில் 124 வது இடத்தினைப் பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயன் மேலும் ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார்.
ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே 99 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் நான்காவது முறையாக மீண்டும் அந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.