TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2024 40 days 132 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்காவில் "6G இணைப்பிற்கான மரபார்ந்த மற்றும் குவாண்டம் (துளிம) தகவல் தொடர்பு" என்ற சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
  • கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆறாவது கிழக்காசிய உச்சி மாநாடு (EAS) ஆனது மும்பையில் நடைபெற்றது.
  • மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி அவர்கள், தளபதி அப்சல் கானைக் கொல்லப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் புலி நகம் என்ற ஆயுதமானது, இலண்டனில் இருந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகாராஷ்டிராவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் வெளிநாட்டு ஜன் ஔஷதி கேந்திரா மொரீஷியஸ் நாட்டில் திறக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் தணிக்கைக்கான சர்வதேச மையத்தினை (iCAL) திறந்து வைத்துள்ளார்.
    • இந்தியாவில் இத்தகைய மையம் நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். என்பதோடு இது உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் மீதான தணிக்கைக்கான உலகளாவிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்