TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2024 38 days 129 0
  • 2,500 சதுர அடிகள் வரையிலான பகுதிகள் மற்றும் 3,500 சதுர அடிகள் வரையிலான கட்டமைக்கப் பட்ட பகுதி ஆகியவற்றிற்கு சுய சான்றிதழ் அளிப்பின் அடிப்படையில் அனுமதி பெறுவதற்கான ஒற்றைச் சாளரத் தளத்தைத் தமிழக முதல்வர் அறிமுகப் படுத்தினார்.
  • வேலூரில் உள்ள எராயங்காடு கிராமத்தில் கோதார் மற்றும் பாலாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் முதலாவது அணை கட்டும் பணி சமீபத்தில் தொடங்கப் பட்டது.
  • கேப்டன் C.T.சுப்ரீதா, சியாச்சின் பனிப் பாறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்ட இராணுவ வான்வழிப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரிகோபெர்டா மென்ச் டம் ‘காந்தி மண்டேலா பவுண்டேசன்’ என்ற அறக்கட்டளையால் 2020 ஆம் ஆண்டிற்கான காந்தி மண்டேலா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார்.
  • அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்