2,500 சதுர அடிகள் வரையிலான பகுதிகள் மற்றும் 3,500 சதுர அடிகள் வரையிலான கட்டமைக்கப் பட்ட பகுதி ஆகியவற்றிற்கு சுய சான்றிதழ் அளிப்பின் அடிப்படையில் அனுமதி பெறுவதற்கான ஒற்றைச் சாளரத் தளத்தைத் தமிழக முதல்வர் அறிமுகப் படுத்தினார்.
வேலூரில் உள்ள எராயங்காடு கிராமத்தில் கோதார் மற்றும் பாலாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் முதலாவது அணை கட்டும் பணி சமீபத்தில் தொடங்கப் பட்டது.
கேப்டன் C.T.சுப்ரீதா, சியாச்சின் பனிப் பாறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்ட இராணுவ வான்வழிப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரிகோபெர்டா மென்ச் டம் ‘காந்தி மண்டேலா பவுண்டேசன்’ என்ற அறக்கட்டளையால் 2020 ஆம் ஆண்டிற்கான காந்தி மண்டேலா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை உறுதி செய்துள்ளார்.