TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2024 4 hrs 0 min 15 0
  • ஒலிம்பிக் போட்டிகளின் செயல்பாடுகளுக்கு அபினவ் பிந்த்ரா ஆற்றிய பல சிறந்த சேவைகளுக்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC) அவருக்கு ஒலிம்பிக் ஆர்டர் விருதினை வழங்கியுள்ளது.
  • கலாச்சாரப் பிரிவில் வட கிழக்கு இந்தியாவின் முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் படுவதற்கு அசாமின் சாரெய்டியோ மைடம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • பத்மஸ்ரீ விருது பெற்ற (2019) ஒடிசாவின் புகழ்பெற்ற இயற்கை விவசாயி கமலா பூஜாரி சமீபத்தில் காலமானார்.
    • இவர் 2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் எனுமிடத்தில் நடைபெற்ற விருது விழாவில் 'Equator Initiative விருதையும்' வென்றுள்ளார்.
  • இந்தியாவின் மிகவும் நீளமான (11.8 கி.மீ) நகர்ப்புறச் சுரங்கப் பாதையான தானே போரிவாலி இரட்டை சுரங்கப் பாதையானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
    • இது தானே மற்றும் போரிவாலி இடையேயான பயண தூரத்தினை 12 கி.மீ அளவு தூரத்தைக் குறைப்பதன் மூலம், மொத்தப் பயண நேரத்தினை 12 நிமிடங்களாகக் குறைக்கும்.
  • வெப்பப் பொறியியல் துறையில் உள்ள நபர்களின் பெரும் கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டினை அங்கீகரிப்பதற்காக, அமெரிக்க நாடானது ஜூலை 24 ஆம் தேதியைத் தேசிய வெப்பப் பொறியாளர் தினமாக அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்