ஒலிம்பிக் போட்டிகளின் செயல்பாடுகளுக்கு அபினவ் பிந்த்ரா ஆற்றிய பல சிறந்த சேவைகளுக்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC) அவருக்கு ஒலிம்பிக் ஆர்டர் விருதினை வழங்கியுள்ளது.
கலாச்சாரப் பிரிவில் வட கிழக்கு இந்தியாவின் முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் படுவதற்கு அசாமின் சாரெய்டியோ மைடம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற (2019) ஒடிசாவின் புகழ்பெற்ற இயற்கை விவசாயி கமலா பூஜாரி சமீபத்தில் காலமானார்.
இவர் 2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் எனுமிடத்தில் நடைபெற்ற விருது விழாவில் 'Equator Initiative விருதையும்' வென்றுள்ளார்.
இந்தியாவின் மிகவும் நீளமான (11.8 கி.மீ) நகர்ப்புறச் சுரங்கப் பாதையான தானே போரிவாலி இரட்டை சுரங்கப் பாதையானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
இது தானே மற்றும் போரிவாலி இடையேயான பயண தூரத்தினை 12 கி.மீ அளவு தூரத்தைக் குறைப்பதன் மூலம், மொத்தப் பயண நேரத்தினை 12 நிமிடங்களாகக் குறைக்கும்.
வெப்பப் பொறியியல் துறையில் உள்ள நபர்களின் பெரும் கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டினை அங்கீகரிப்பதற்காக, அமெரிக்க நாடானது ஜூலை 24 ஆம் தேதியைத் தேசிய வெப்பப் பொறியாளர் தினமாக அனுசரிக்கிறது.