TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 28 , 2024 118 days 140 0
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) இந்தியா சார்பான உறுப்பினராக நிதா அம்பானி ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மிசோரம் மாநிலத் தலைநகரான ஐஸ்வால், அடுத்த ஆண்டிற்குள் நேரடி இரயில் இணைப்பை  கொண்ட வடகிழக்கு இந்தியாவின் நான்காவது மாநிலத் தலைநகரமாக மாற உள்ளது.
  • பெருந்தொற்றிற்கான தயார்நிலை கண்டுபிடிப்புகளின் (CEPI) கூட்டணியின் கீழ் ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சி தொடர்பான "மருத்துவத்திற்கு முந்தைய நிலைகள் சார்ந்த செயல்பாடுகளின் வலையமைப்பு மையமானது" ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது, விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத் தக்கப் பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க உலக விண்வெளி விருதை வென்றுள்ளது.
    • சர்வதேச விண்வெளிக் கூட்டமைப்பு (IAF) ஆனது இந்த விருதினை வழங்கியுள்ளது.
  • இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர்களான லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கான புகழ் மன்றத்தில் 265வது மற்றும் 267வது உறுப்பினர்களாக முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • இதனால், சர்வதேசப் புகழ் மன்றத்தில் சேர்க்கப்பட்ட முதல் இரு ஆசியர்கள் என்ற பெருமையினை அவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.
  • மேகாலயாவின் நிகழ்ச்சிகளை உருவாக்குபவர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக மேகாலயா அரசாங்கம் ஆனது ஹலோ மேகாலயா எனப்படும் இணைய ஒலிபரப்பு சேவை (OTT) தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • கேரளாவிற்கு அடுத்தபடியாக இதுபோன்ற ரீதியிலான முயற்சியைத் தொடங்கும் இந்தியாவின் இரண்டாவது மாநிலம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்