தமிழக முதல்வர் அவர்கள், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் (வைகை இல்லம்) புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், இராஷ்டிரபதி பவனில் உள்ள - 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகிய இரண்டு அரங்குகளுக்கு முறையே 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக மண்டபம்' என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்து உள்ளார்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் ஆனது, நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கனிம அறக்கட்டளைகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தேசிய மாவட்டக் கனிம அறக்கட்டளை (DMF) இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள் நிறுவனமானது, இந்தியாவில் H125 ஹெலிகாப்டருக்கான முதல் ஒருங்கிணைப்பு மையத்தினை நிறுவ உள்ளது.
ஊட்டியின் அன்பிற்குரிய நூலகர் டாப்னே சாம்சன் சமீபத்தில் தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
2024 ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு ஆனது, ஐக்கியப் பேரரசின் நாடாளுமன்றத்தில் உள்ள பிரபுக்கள் சபையில் நடைபெற்றது.
R.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் பட் ஆகியோர் “Jamsetji Tata: Powerful Learnings for Corporate Success” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளனர்.
இந்தக் கதைச் சுருக்கமானது, ‘Tata: a leader of leaders’ என்ற ஒரு தலைப்பில் இருந்து எடுக்கப் பட்டது.