பிரான்சு நாட்டு அரசானது தெற்காசியப் புகைப்படக் கலை மற்றும் இந்திய-பிரான்சு கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக வேண்டி ரஹாப் அல்லானா ஆற்றியப் பணிக்காக, அவரை Officer of the Order of Arts and Letters எனும் விருது அளித்து கௌரவித்துள்ளது.
பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் ஒலிம்பிக் XXVI மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2030) நடத்தப்பட உள்ளன.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தின் தலைநகரான சால்ட் லேக் சிட்டி நகரில் ஒலிம்பிக் XXVII மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2034) நடத்தப்பட உள்ளன.
சுவிட்சர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விருது விழாவில் ஷாருக்கானுக்கு மதிப்பு மிக்க பர்டோ அல்லா கேரியரா விருது வழங்கப்பட உள்ளது.
சமீபத்தில், பாரிஸின் கிரெவின் அருங்காட்சியகம் அவரின் உருவம் பொதித்தத் தங்க நாணயங்களை வெளியிட்டு கௌரவித்தது.
சர்வதேச நண்பர்கள் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
ஆனால், இந்தியா, வங்காளதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற சில நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை தினத்தினை நட்பு தினமாக அனுசரிக்கின்றன.