மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்கிற்கு, நீரிழிவு நோயியல், நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சியின் முன்னேற்றத்தில் அவரது மகத்தான அர்ப்பணிப்பிற்காக மிக மதிப்புமிக்க "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப் பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) உறுப்பினர் நீதா அம்பானி, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக என்று ஒதுக்கப் பட்டுள்ள முதல் இல்லமான இந்தியா இல்லத்தினை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
நீருக்கடியிலான இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் ஆனது, டெல்லியில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமான ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் திறக்கப் பட்டுள்ளது.
"உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2024" (SOFI 2024) அறிக்கை என்பது உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD), UNICEF, உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கிச் சுடுதல் (ஏர் பிஸ்டல்) கலப்புப் பிரிவு போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
இதன் மூலம், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே கோடைகால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியத் தடகள வீராங்கனை என்ற ஒரு பெருமையை மனு பெற்றுள்ளார்.