உத்தரப் பிரதேச மாநில அரசானது யார் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்யலாம் என்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்காக வேண்டி 2024 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் புறம்பான மதமாற்றம் தடை (திருத்தம்) என்ற மசோதாவினை நிறைவேற்றி உள்ளது.
தீவிரவாதம் மற்றும் பணமோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் வழங்கப்படுவது போன்ற கடுமையான பிணை நிபந்தனைகளை முன் மொழியச் செய்வதோடு, சட்டவிரோதமான மதமாற்றத்திற்கான தண்டனையினையும் இது அதிகரிக்கிறது.
வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ 51% வாக்குகளுடன் மூன்றாவது முறையாக அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.