பாரீசு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 3 நிலைகளிலான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார்.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) ஆனது, சமீபத்தில் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பம் சார்ந்த 500 MWe திறன் கொண்ட சோடியம்-குளிர்விக்கப்பட்ட முதலுறு வேக ஈணுலையில் (PFBR) ‘அணுசக்தி எரிபொருளினை நிரப்பும் செயல்முறைக்கு' அனுமதி வழங்கியுள்ளது.
உலக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (GEEF) அமைப்பினால் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு உலகளாவிய நீர் சார்ந்த தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், மத்திய நீர் ஆணையத்திற்கு (CWC) 'ஆண்டின் சிறந்த நீர்வளத் துறைக்கான' GEEF உலக நீர் சார் தொழில்நுட்ப விருது வழங்கப் பட்டுள்ளது.