TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 8 , 2024 107 days 167 0
  • இந்தியாவும் சீனாவும், இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான (WMCC) ஆலோசனை வழங்கீட்டு மற்றும் ஒருங்கிணைப்பிற்கான செயல்பாட்டு நெறிமுறை குறித்த 30வது கூட்டத்தினைப் புது டெல்லியில் நடத்தியது.
  • இரு சக்கர வாடகை வாகனச் சேவை சார்ந்தப் புத்தொழில் நிறுவனமான ரேபிடோ, சமீபத்தில் யூனிகார்ன் நிறுவனமாக மாறிய, அதாவது மதிப்பீட்டில் 1 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டிய இந்திய புத்தொழில் நிறுவனம் ஆகும்.
  • தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) ஆனது, மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது முக்கியமான திறன்கள், அறிவு மற்றும் திறன் சார் வலையமைப்பு வாய்ப்புகளை வழங்கச் செய்வதன் மூலம் தொழில்முனைவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஆனது, தேசியத் தொழிற்பயிற்சிப் வழங்கீட்டுத் திட்டம் (NATS) 2.0 என்ற இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
    • இது தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள முனையும் நபர்களை பதிவு செய்து, அதற்கான வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வழி வகுப்பத்தோடு, தொழில் துறைகள் ஆனது வேலை வாய்ப்புகள் மற்றும் வேலைகளுக்கான ஒப்பந்தங்களை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது, 2024 ஆம் ஆண்டு தேசிய அளவில் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு சரக்குப் பொருட்கள் கையாளப் படுகிறது என்பது குறித்தச் செயல்திறன் மதிப்பீட்டு ஆய்வு (NTRS) அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
    • மொத்தமுள்ள 15 துறைமுகங்களில், 9 துறைமுகங்களில் சரக்குகள் வெளியேற எடுத்துக் கொள்ளும் காலம் முந்தைய ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் குறைவாக பதிவாகியுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவில் உள்ள "மனித உரிமைகள், விடுதலை மற்றும் நல்லிணக்கம்: நெல்சன் மண்டேலா அவர்களின் மரபை வெளிப்படுத்தும் தளங்கள்" ஆனது யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
    • நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய 14 இடங்களை இது உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்