குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு ஃபிஜியின் அதியுயர் கௌரவ விருதான ‘Companion of the Order of Fiji’ விருது வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் தலைமையிலான முதலாவது ஆளுநர்கள் மாநாடு ஆனது டெல்லியில் இராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
லெப்டினன்ட் கர்னல் கபிலன் சாய் அசோக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குத்துச் சண்டைப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய இந்தியாவின் இளம் நபர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
சமீபத்தில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சி (MPX) நடத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பாரீசு ஒலிம்பிக் போட்டிகளில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.