TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 12 , 2024 103 days 180 0
  • திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான உயிரி வேதியியலாளர் கோவிந்தராஜன் பத்மநாபன், நாட்டின் முதன்மையான அறிவியல் விருதான முதலாவது ‘விஞ்ஞான ரத்னா’ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பொருளாதார மாற்றம், நிதி உள்ளடக்கம் மற்றும் பெரு மேம்பாட்டிற்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பிற்கான இந்தியாவின் G20 பணிக் குழுவானது, ‘எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு குறித்த இந்தியாவின் G20 பணிக் குழுவின் இறுதி அறிக்கை’ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, பேரிடர் மேலாண்மை காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக நாகாலாந்து மாறியுள்ளது.
  • ஜிம்பாப்வே 1992 ஆம் ஆண்டு எல்லைப் பகுதிகளில் அமைந்த நீரோட்டப் பாதைகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் வளங்காப்பு மற்றும் அதன் பெரும் பயன்பாடு பற்றிய உடன்படிக்கையினை (UN Water Convention) ஏற்ற 54வது நாடாகவும், 11வது ஆப்பிரிக்க நாடாகவும், மாறியுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று தேசியப் புத்தகப் பிரியர்கள் தினம் கொண்டாட ப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்