'பர்வத் பிரஹார்' இராணுவப் பயிற்சியானது, லடாக்கின் உயர் மட்டப் பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் நடத்தப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் பயிற்சியாகும்.
புராந்தர் ஹைலேண்ட்ஸ் ஃபார்மர்ஸ் ப்ரொட்யூசர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனமானது, இந்தியாவில் முதல் முறையாக புவிசார் குறியீடு பெற்ற அத்திப் பழச் சாற்றை போலந்துக்கு ஏற்றுமதி செய்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியானது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டியை அதன் தலைவராக நியமித்து உள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நோவா லைல்ஸ் என்பவர் ஜமைக்காவின் கிஷான் தாம்சனை வெறும் 0.005 வினாடிகள் என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி பூமியின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் (மனிதர்) என்ற பட்டத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது ஸ்பெயின் அணியினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தினை வென்று உள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் பாரீசு ஒலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவிற்கான ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்தியக் குழுவின் கொடி ஏந்துபவர்களாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ் மற்றும் மனு பாக்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தனர்.