மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆனது, ஒரு சில தொழில் துறைப் பங்குதாரர்களிடையே தனிப்பட்ட முறையில் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டு ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை திரும்பப் பெற்றது.
ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW) மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) ஆகியவற்றிற்கு எதிராக வினேஷ் போகட் முன் வைத்த மேல்முறையீட்டை விளையாட்டுத் துறைக்கான நடுவண் நீதிமன்றத்தின் (CAS) அவசரப் பிரிவானது நிராகரித்துள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான 10வது கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி’ இலங்கையில் நடைபெற்று வருகிறது.
நடிகரும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அவர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.