TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 19 , 2024 96 days 139 0
  • மாநிலங்களவை உறுப்பினர் பீம் சிங் 75 Great Revolutionaries of India என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • 90 மெகாவாட் ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட மத்திய மற்றும் வட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையமானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் எனுமிடத்தில் தொடங்கப்பட்டது.
  • சுவிட்சர்லாந்தின் 77வது லோகார்னோ திரைப்பட விழாவில் பர்டோ அல்லா கேரியரா/ Career Leopard என்றும் அழைக்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார்.
  • சத்தீஸ்கர் மாநில அரசானது, அந்த மாநிலத்தில் புதிய புலிகள் வளங்காப்பகத்தினை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து, காடுகள் நிறைந்துள்ள அம்மாநிலத்தின் நான்காவது புலிகள் வளங்காப்பகமாக இது அமைய உள்ளது.
    • தற்போது ​​சத்தீஸ்கரில் மூன்று புலிகள் வளங்காப்பகங்கள்,  பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி, கரியாபந்தில் உள்ள உடந்தி-சிதாநதி மற்றும் முங்கேலியில் உள்ள அச்சனக்மர் வளங்காப்பகம் ஆகிய உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்