கொச்சியில் வசித்த கடைசி வெளிநாட்டு யூதப் பெண்ணான குயின்னி ஹலேகுவா சமீபத்தில் காலமானார்.
நதிகளில் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்து பொது மக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்குவதற்காக மத்திய நீர் வள ஆணையம் ஆனது 'FloodWatch India-2.0' செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய நெய்வேலி லிக்னைட் கழக லிமிடெட் நிறுவனமானது, அதன் பெருநிறுவனத் திட்டம் 2030 மற்றும் தொலைநோக்குக் கொள்கை 2047 ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் மொத்த மின் உற்பத்தித் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
தற்போது 1.43 ஜிகா வாட்டாக உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 10.11 ஜிகா வாட்டாக உயர்த்துவதன் மூலம் மொத்த திட்டமிடப் பட்ட திறனில் சுமார் 50% ஆற்றலைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த உற்பத்தி மூலம் அடைய முனைகிறது.
இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) மற்றும் தேசியத் தலைநகர மண்டலப் போக்குவரத்துக் கழகம் (NCRTC) ஆகியவை இணைந்து இந்திய இரயில்வே மற்றும் நமோ பாரத் இரயில்களில் பயணிகளின் பெரும் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ‘ஓர் இந்தியா-ஒரே பயணச்சீட்டு’ திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
இது ரத்து செய்தல் மற்றும் பணம் செலுத்துதலுக்கான ஒரு இசைவு மிக்க செயல் முறைகளுடன் இரண்டு தளங்களிலும் நமோ பாரத் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகளுக்கு வழி வகுக்கும்.