TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 24 , 2024 91 days 105 0
  • பாரத் பெட்ரோலியம் கழக லிமிடெட் (BPCL) நிறுவனமானது இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் கலவையான அதிக தீப்பற்றுதல் திறன் மற்றும் அதிவேக திறன் கொண்ட டீசல் (HFHSD) சேமிப்பகத்தினை மும்பை துறைமுகத்தில் அமைத்துள்ளது.
  • புதிதாக கையொப்பமிட்ட ஐக்கியப் பேரரசு-இந்தியத் தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பின் (TSI) கீழ் முக்கிய கனிம ஆய்விற்கான கூட்டுறவினை விரிவுபடுத்தச் செய்வதற்காக ஐக்கியப் பேரரசுடன் (UK) பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது உணவுப் பொருட்களில் நுண் நெகிழிகள் மாசுபாட்டை மதிப்பிடுவதற்கும் அதைக் கண்டறியச் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளை உருவாக்குவதற்கும் என்று ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • காசா பகுதியில் முதல் முறையாக போலியோ நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளது.
  • காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் குறைந்தது 22 பேர் உயிரி இழந்துள்ள நிலையில் மேலும் குறைந்தது 354 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
  • உலகப் புகைப்படத் தினமானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
    • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "An Entire Day" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்