TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 26 , 2024 89 days 144 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்ததொரு விமானத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ருமி 1 எனப்படும் கலப்பு நுட்பம் சார்ந்த ஏவு கலத்தினைப் பயன்படுத்திப் பல வளிமண்டலச் சூழ்நிலைகளைக் கண்காணிக்கவும், பல்வேறு தரவுகளைச் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட மூன்று பெட்டக வடிவ (சிறிய) செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
  • நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அரசின் அடுத்தத் தூதராக / நிரந்தரப் பிரதிநிதியாக பர்வதனேனி ஹரிஷ் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக நிதியியல் சார் மத்திய வங்கிகளின் தரநிலை மதிப்பீடுகளில் “A+” மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.
  • இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் குழுவானது, அடுத்து வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான இந்தியக் குழுவின் அணிப் பொறுப்பாளராக சத்ய பிரகாஷ் சங்வானை நியமித்து உள்ளது.
  • இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோர் அவர்களின் ஜப்பானிய நாட்டு இணை சகாக்களுடன் இணைந்து புது டெல்லியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு '2+2" பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
  • 2024 ஆம் ஆண்டு மகளிர் T20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியானது பாதுகாப்பு  காரணங்களுக்காக வங்க தேசத்திற்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப் பட உள்ளது.
  • தமிழக அரசானது, புயல்களைக் கண்காணிப்பதற்காக ஏற்காடு மற்றும் இராமநாத புரத்தில் தலா இரண்டு டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகளை நிறுவ உள்ளது.
    • தற்போது ஏற்கனவே சென்னையில் இரண்டு ரேடார்களும், காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் தலா ஒரு ரேடாரும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்