TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 28 , 2024 87 days 167 0
  • திவ்யாங் கலைஞர்களுக்கான 17வது திவ்ய கலா மேளாவை சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூர் நடத்தியது.
  • 'கானு' (பசுமை காடு என்று பொருள்) எனும் தென்னிந்தியாவின் முதல் ஆதிவாசி நூலகமானது கர்நாடகாவின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள பிலிகிரிரங்கன் மலையில் திறக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிக வயதான மனிதரான (117 வயது 168 நாட்கள்) மரியா பிரான்யாஸ் ஸ்பெயினில் காலமானார்.
  • 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் வருணா நதியினை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கத்தில், 'தூய்மையான நதிகள் குறித்த திறன் மிகு ஆய்வகத்தினை’ வாரணாசியில் உருவாக்குவதற்காக இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் கை கோர்த்துள்ளன.
  • அமுல் நிறுவனம் ஆனது, பிராண்ட் பினான்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு உணவு மற்றும் பானங்கள் குறித்த அறிக்கையினால் AAA+ மதிப்பீட்டுடன் உலகின் வலிமையான உணவுத் தயாரிப்பு நிறுவனமாக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
  • எலான் மஸ்க் நிறுவனத்தின் X செயற்கை நுண்ணறிவு ஊடகம் ஆனது அதன் சமீபத்தியப் பெரிய மொழி மாதிரிகளான Grok-2 மற்றும் Grok-2 மினி ஆகிய உரையாடு மென்பொருள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் பயிற்சிகள் என்ற பெயரிலான வருடாந்திர கோடைக்கால இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கி உள்ளன.
  • நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாத காலக் கட்டத்தில் நிகர அந்நிய நேரடி முதலீடு (FDI) ஆனது 6.9 பில்லியன் டாலராக இருந்ததோடு இது முந்தைய ஆண்டில் 4.7 பில்லியன் டாலராக இருந்தது.
    • சுமார் 75 சதவீத முதலீடுகளுடன், சிங்கப்பூர், மொரீஷியஸ், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் ஆகியவை முக்கிய முதலீட்டு மூல நாடுகளாக உள்ளது.
  • இந்திய-அமெரிக்க வர்த்தக சபையின் (IACC) இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கான முதல் சிறப்பு மையம் அகமதாபாத்தில் திறக்கப் பட்டது.
    • இது ஏற்றுமதிச் சந்தைகளுக்குச் சிறப்பான முறையில் சேவை வழங்குவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களை (MSMEs) மேம்படுத்தி ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்