TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2024 45 days 98 0
  • சென்னை புழல் ஏரியில் அமைக்கப்பட உள்ள சர்வதேச தரத்திலான அழகுமீன் வளர்ப்பு வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குத் தமிழக முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • சதாரா மாவட்டத்தின் படன் தாலுக்காவில் உள்ள மன்யாச்சிவாடி என்ற கிராமம் மகாராஷ்டிராவின் முதல் ‘சூரிய சக்தி கிராமம்’ ஆக மாறியுள்ளது.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4.5 தலைமுறை நுட்பம் சார்ந்த மற்றும் LCA மார்க் 2 ரக போர் விமானங்கள் ஆனது 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விமானங்களைப் படையில் இணைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளன என்ற நிலையில் 2029 ஆம் ஆண்டிற்குள் இவற்றின் பெரிய அளவிலான உற்பத்தித் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, சர்வதேச விமான நிலைய சபையின் அங்கீகாரத் திட்டத்தின் கீழ் நிகர சுழிய அளவிலான கார்பன் உமிழ்வு நிலையைப் பெற்ற நாட்டின் முதல் விமான நிலையமாக மாறியுள்ளது.
  • O.P. ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகம் (JGU) இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தைத் தொடங்க உள்ளது.
    • இந்த அருங்காட்சியகத்திற்கு, "அரசியலமைப்பு அகாடமி மற்றும் உரிமைகள் மற்றும் சுதந்திர அருங்காட்சியகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் சிறிய அளவிலான தொழில்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அங்கீகரிக்க இந்தியா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30 அன்று தேசிய சிறு தொழில்கள் தினமாக அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்