TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2024 83 days 121 0
  • சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லேவுக்கு அடுத்து BCCI செயலாளர் ஜெய் ஷா அதன் புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமேசான் காடுகளில் மீண்டும் மரங்களை வளர்ப்பதற்கு நிதி திரட்ட உதவுவதற்காக, உலக வங்கியானது 225 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒன்பது ஆண்டு காலப் பத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சென்னையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் MRF சலூன்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை டயானா பூண்டோல் பெற்றுள்ளார்.
  • உலக கேட்பொலி காட்சி & பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் (WAVES) முதலாவது 'Create in India Challenge - Season 1' மூலம் திறமையான நபர்களை உலக அரங்கில் முன்னிலைப் படுத்தவும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் மத்திய அரசானது தயாராக உள்ளது.
  • தனது ஊழியர்களுக்காக மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.
  • தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனச் சங்கம் அல்லது NASSCOM சங்கத்தின் தலைவராக சிந்து கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெங்களூருவின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (IIM-B) ஆனது, தனியார் பங்கு (PE) மற்றும் துணிகர முதலீடு (VC) ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதல் உலகளாவிய சிறப்பு மையத்தினை நிறுவச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • வரவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பெருங்கடல் ஒப்பந்தம் எனப் படும் தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தத்தில் (BBNJ) இந்தியா கையெழுத்திட உள்ளது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் ஜனவரி மாதம் முதல் ஆப்பிள் Inc நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) பொறுப்பேற்பார் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்