TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2024 41 days 99 0
  • சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில், மதுரை முதல் பெங்களூரு கண்டோன்ட் மற்றும் மீரட் நகரிலிருந்து லக்னோ வரை என மூன்று புதிய வந்தே பாரத் விரைவு ரயிலைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • அமேசான் நிறுவனமானது ரூஃபஸ் எனப்படும் தனது மிக ஆக்கப் பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளினை இந்திய வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்தியாவில் உள்ள சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் என்ற ஒரு பெரு நிறுவனம் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குரங்குக் காய்ச்சலுக்கான RT-PCR பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் பானக்கியா பயோடெக் லிமிடெட் ஆகியவை முதல் முறையாக DengiAll எனப்படுகின்ற டெங்கு தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை இந்தியாவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
  • இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு (ICC) ஆனது டெல்லியில் படைப்பாக்கம் மிக்க பொருளாதாரத்திற்கான அகில இந்திய முன்னெடுப்பினை (AIICE) மிகவும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியா அறக்கட்டளையானது, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 8வது தர்ம தம்மா மாநாட்டினை ஏற்பாடு செய்து உள்ளது.
  • இந்திய விமானப்படை (IAF) ஆனது முதலாவது எகிப்து சர்வதேச விமானக் சாகச காட்சி நிகழ்வில் (2024) பங்கேற்பதற்காக தனது சாரங் ஹெலிகாப்டர் சாகச காட்சிக் குழுவினை அனுப்பியுள்ளது.
  • காந்திநகரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, நர்மதா நதிப் படுகையின் நிலை மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்தை (CAMP) மேற் கொள்வதற்காக நர்மதா நதி படுகை மேலாண்மை மையத்தினை (cNARMADA) நிறுவியுள்ளது.
  • சௌமியா சுவாமிநாதன் அவர்கள், ஆர்வலர் கல்பனா சங்கர் எழுதிய ‘The Scientist Entrepreneur: Empowering Millions of Women’ என்ற ஒரு சுயசரிதை புத்தகத்தினை வெளியிட்டுள்ளார்.
  • பஞ்சாப் மாநிலம் ரோபார் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய தேக்பீர் சிங், ஆப்பிரிக்காவின் 5895 மீ உயரமுள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்த முதல் இளம் ஆசிய நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • மாலத்தீவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • 1986 ஆம் ஆண்டு பணி நியமன தொகுதியினைச் சேர்ந்த இரயில்வே நிர்வாக இயந்திரப் பொறியாளரான சதீஷ் குமார், இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO) நியமிக்கப் பட்டு உள்ளார்.
    • இரயில்வே நிர்வாகத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் அதன் தலைமைப் பொறுப்பேற்ற முதல் தலித் நபர் இவர் ஆவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்