TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 7 , 2024 31 days 66 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரளாவின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலகும் டாக்டர் V. வேணு, தனது மனைவி சாரதா முரளீதரனிடம் தனது பதவியை ஒப்படைத்தார்.
  • கேரள சுற்றுலாத்துறையானது 'ஹாலிடே ஹெய்ஸ்ட்' என்ற தலைப்பிலான அதன் புதிய எண்ணிமச் சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்திற்காக, மதிப்பு மிக்க பசிபிக் ஆசிய பயணக் கூட்டமைப்பு (PATA) தங்க விருதினைப் பெற்றுள்ளது.
  • ஊழியர்களைப் பணி சார்ந்த தொடர்பிலிருந்து தங்களை "துண்டிக்கும் உரிமையை" அனுமதிக்கும் நாடாக ஆஸ்திரேலியா சமீபத்தில் மாறியுள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனமானது 2023-24 ஆம் நிதியாண்டில் 10,00,122 கோடி ரூபாய் (119.9 பில்லியன் டாலர்) ஆண்டு வருமானத்துடன் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • ஜப்பானிய திரைப்படத் தயாரிப்பாளர் ஹயாவோ மியாசாகி, ஆசியாவின் நோபல் பரிசு என்று பொதுவாக அழைக்கப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருதை வென்றுள்ளார்.
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது, பூசாவில் க்ரிஷி நிவேஷ் மற்றும் AgriSURE நிதி என்ற ஒருங்கிணைந்த வேளாண் முதலீட்டு இணைய தளத்தினைத் தொடங்கி வைத்துள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் சபையின் 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டியானது இலண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூமியின் துருவப் பகுதிகளுக்கு மேலே விண்வெளிப் பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃப்ராம்2 எனப்படுகின்ற விண்வெளிப் பயணத்திற்கான விண்கலத்தில் 4 பேரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு நினைவாக அதன் புதிய கொடி மற்றும் சின்னத்தை வெளியிட்டார்.
    • இந்திய உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு நினைவு தபால் தலையைப் பிரதமர் வெளியிட்டார்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆதரவு பெற்ற ஒரு புத்தொழில் நிறுவனமானது இந்தியாவின் முதல் உராய்வு நீர்த்தாரை பீச்சு இயந்திரத்தை வடிவமைத்துள்ளது என்ற நிலையில் இது வெப்பத்தை உருவாக்காமல் எளிதில் தீப்பற்றக் கூடியப் பொருட்களை வெட்டுவதற்குப் பயன்படுகிறது.
    • இதனைக் குறைக்கடத்தி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் வைரத் தொழில்துறைகளில் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்