TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 8 , 2024 29 days 73 0
  • 24வது தேசிய மேலாண்மை உச்சி மாநாட்டில் நெய்வேலி லிக்னைட் கழகம் - இந்தியா லிமிடெட் நிறுவனமானது சிறப்பான பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நடைமுறைகளுக்கான முன்னணி நிறுவன விருதைப் பெற்றுள்ளது.
  • ஈட்டன் நிறுவனமானது, சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் உலகளாவிய பொறியியல் மையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T63 பிரிவில் இந்தியாவின் ஷரத் குமார் (பீகார்) மற்றும் மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாடு) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது புது டெல்லியில் இரண்டு நாட்கள் அளவிலான தேசிய மாவட்ட நீதித்துறை மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்