TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 9 , 2024 75 days 105 0
  • மேம்பட்ட அளவீட்டுக் கட்டமைப்பு மற்றும் திறன் மிகு கட்டமைப்பு உள்ளிட்டவை தொடர்பான அமெரிக்க நிறுவனமான ட்ரில்லியன்ட் நெட்வொர்க்ஸ் நிறுவனமானது, தமிழகத்தில் 2,000 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.
  • ஃபார்ச்சூன் இதழின் 500 காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களுள் ஒன்றான அஷ்யூரன்ட், சென்னையில் தனது முதலாவது உலகளாவியத் திறன் மையத்தினை (GCC) நிறுவ உள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது, அதன் போஷான் டிராக்கர் முன்னெடுப்பிற்காக 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய மின் ஆளுகை (தங்கம்) விருதை வென்றுள்ளது.
  • சித்தார்த்த அகர்வால் இங்க்லிஷ் கால்வாயை (இங்கிலாந்து மற்றும் பிரான்சு இடையே அமைந்துள்ளது) நீந்தி கடந்த (49) மிகவும் அதிக வயதான இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ஜெர்மனியின் ஹன்னோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோருக்கான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுயா பிரசாத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • பெங்களூருவில் நடைபெற்ற 63வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த R.வித்யா இராம்ராஜ் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தினை 53.23 வினாடிகளில் நிறைவு செய்து P.T.உஷாவின் 39 ஆண்டு காலத்தியச் சாதனையை முறியடித்துள்ளார்.
  • சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) அறக்கட்டளையின் முதல் இந்தியத் தூதராக தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஷரத் கமல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆனது, ஹில்கோல் (BBV131) எனப்படும் ஒரு புதிய ஒற்றை மாற்றுரு வாய்வழி காலரா தடுப்பு மருந்தினை (OCV) அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்