லிங்கன் எலக்ட்ரிக், விஷே துல்லியம் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் 850 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்து இட்டுள்ளது.
இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இடையில் நடத்தப்படும் வருணா எனப் படும் 22வது இருதரப்புக் கடல்சார் பயிற்சியானது மத்தியத் தரைக் கடலில் பிரெஞ்சுக் கடற்படையினால் நடத்தப்பட்டது.
மத்திய அரசானது, அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் அமைந்து உள்ள கலாத்தியா விரிகுடாவில் அமைந்து உள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து மையத்தினை 'பெரிய துறைமுகமாக' அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா அரசானது, மும்பையில் 27வது தேசிய மின் ஆளுமை மாநாட்டினை (NCeG) நடத்தியது.
பீகாரின் இராஜ்கிர் நகரில் 2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
கடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய யாகி எனும் ஒரு அதி சூறாவளியானது வியட்நாமைத் தாக்கியது.