ஐக்கியப் பேரரசு மற்றும் இந்தியா தங்களது நிதி மற்றும் தொழில்முறை சேவைக் கூட்டுறவினை வலுப்படுத்துவதற்காக ஐக்கியப் பேரரசு-இந்தியா உள்கட்டமைப்பு நிதி இணைப்பு (UKIIFB) முன்னெடுப்பினை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
HDFC வங்கியானது குறிப்பாக இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட GIGA எனப்படும் புதிய நிதித் தொகுப்பினை வெளியிட்டது.
இந்தியாவில் முதன்முறையாக, ஸ்டார் சுகாதார மற்றும் அது சார்ந்தக் காப்பீட்டு நிறுவனமானது இந்தியாவில் பார்வைத் திறனற்ற நபர்களை ஊக்குவிப்பதற்காக பிரெய்லி காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் கூட்டுத் தளபதிகள் மாநாடு (JCC) ஆனது லக்னோவில் 'சஷக்த் மற்றும் சுரக்சித் பாரத்: ஆயுதப் படைகளை மாற்றியமைத்தல்' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டிற்கான முதன்மை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை (CSAR) மாநாடு ஆனது பாரிஸ் நகரில் யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) ஆனது, தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற 20வது ஆசிய கடலோரக் காவல்படைகளுக்கான முகமைகளின் (HACGAM) தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றது.
ஜென்சோல் இன்ஜினியரிங் என்ற ஒரு நிறுவனமானது, இந்தியாவின் முதல் உயிரி எரிபொருளிலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டத்தின் பொறியியல், கொள் முதல் மற்றும் கட்டமைப்பு (EPC) பணிகளுக்காக மிகக் குறைந்த மதிப்பீட்டினை முன் வைத்த ஏலதாரராக உருவெடுத்துள்ளது.
இந்த மையமானது தினசரி சுமார் 25 டன் உயிரிக் கழிவுகளைச் செயல்முறைக்கு உள்ளாக்கி, 18 மாதங்களில் மேம்பட்ட வாயுமயமாக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்.