TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 15 , 2024 15 days 44 0
  • BRICS புதிய மேம்பாட்டு வங்கியில் (NDB) அல்ஜீரியாவின் அங்கத்துவம் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, அவ்வமைப்பின் ஒன்பதாவது உறுப்பினராக அது மாறியுள்ளது.
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது கார்பன் கணக்கீட்டு நிதியியல் (PCAF) கூட்டாண்மையில் கையெழுத்திட்ட முதல் பெரிய வங்கியாக மாறியுள்ளது.
  • இரண்டு நாட்கள் அளவிலான முதல் சர்வதேச சூரிய சக்தி திருவிழாவானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • ஐதராபாத் அருகே நிறுவப்படுவதற்காக முன் மொழியப்பட்ட செயற்கை நுண்ணறிவு நகரில் உலக வர்த்தக மையத்தினை அமைப்பதற்காக உலக வர்த்தக மையங்களின் சங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெலுங்கானா அரசு கையெழுத்திட்டு உள்ளது.
  • ஜப்பானின் அய்ச்சி-நாகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பண்டையச் செயல்பாடான யோகாசனம் ஒரு மாபெரும் செயல்விளக்க நிகழ்வாகச் சேர்க்கப்பட்டது.
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை முதன்முறையாக பொது அணுசக்தி கூட்டுறவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
  • இலண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பூங்காவானது புதிய தேசிய இராணி இரண்டாம் எலிசபெத் நினைவிடத்தினை அமைப்பதற்கான இடமாக ஐக்கியப் பேரரரசு நாட்டின் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்தியத் தேசியக் கொடியினை ஏந்தி அணியினை வழி நடத்தும் வீரர்களாக வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்