TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 17 , 2024 67 days 108 0
  • சதுப்புநில வளங்காப்பு மையத்தினை நிறுவதற்காக முன்பு மொழியப்பட்ட இடமான முத்துப்பேட்டைக்குப் பதிலாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கை சுற்றுலாவின் முன்னணி ஆதாரச் சந்தையாக இந்தியா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • 2024-25 முதல் 2028-29 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா-IV (PMGSY-IV) திட்டத்தினை செயல்படுத்துவதற்காக வேண்டி ஊரக மேம்பாட்டுத் துறையின் முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆனது சீமென்ஸ் ஹெல்த்நியர் என்ற நிறுவனத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட IMDX குரங்குக் காய்ச்சல் வைரஸ் நோய் கண்டறிதலுக்கான RT-PCR சோதனைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் எக்ஸான்மொபில் ஆகியவை உலகின் மிகப்பெரிய குறைந்த கார்பன் உமிழ்வுத் திறன் கொண்ட ஹைட்ரஜன் உற்பத்தி மையத்தினை உருவாக்குகின்றன.
  • நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒரு இந்திய வம்சாவளிச் சொற்பொழிவாளரான பிரசாந்தி ராம், அவரது சிறுகதையான ‘’Nine Yard Sarees’ எனப்படும் ஆங்கிலப் புனைக் கதைக்காக சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்று உள்ளார்.
  • லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் ஆகியவை C-130J சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் பிற உலகளாவிய C-130J வகை விமானங்களுக்காகப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையத்தினை இந்தியாவில் நிறுவுவதற்கு ஒரு கூட்டுறவினை மேற் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்