TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 18 , 2024 66 days 91 0
  • இந்தியாவை விட்டு வெளியேறிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஆனது, ஏற்றுமதி செய்வதற்கான கார்களை உற்பத்தி செய்வதற்காக சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் உள்ள தனது உற்பத்தி ஆலையை மீண்டும் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
  • எண்ணிம வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பு (ONDC) ஆனது வணிகங்கள் தங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட வாங்குவோர் தரப்பினருக்கு உகந்த வகையில் செயலிகளை உருவாக்குவதில் உதவுவதற்காக பாஷினியுடன் இணைந்து உருவாக்கப் பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ள சார்த்தி எனப்படும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது, 'நம்பகமான மற்றும் நிரூபிக்கப்பட்ட கூட்டாண்மைகள் மூலம் பிராந்திய ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற 16வது ககாடு பயிற்சியில் (2024) 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து பங்கேற்றது.
  • சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் நிறுவனமானது, சுமார் 1,166 மெகாவாட் திறன் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தினை பெற்றுள்ளது என்ற நிலையில் இது இந்தியாவிலேயே தேசிய அனல் மின் நிலைய கழகப் பசுமை ஆற்றல் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பெறப்படும் மிகப்பெரிய காற்றாலை ஆற்றல் உற்பத்தி ஒப்பந்தம் ஆகும்.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய நன்னீர்வாழ் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIFA) ஆனது, மீன் வளர்ப்பாளர்கள் மற்றும் மீன் கடை உரிமையாளர்களுக்கு வண்ண மீன்வளத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக 'ரங்கீன் மச்சிலி' என்ற கைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.
  • இந்திய இராணுவப் படைப்பிரிவானது, ஓமனில் நடைபெறும் அல் நஜா எனப்படும் 5வது இந்திய-ஓமன் கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்க உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொது சபையின் 79வது அமர்வு (UNGA 79) ஆனது 2024 ஆம் ஆண்டு 10 செப்டம்பர் 10 ஆம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதியன்று நிறைவடைய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்