முதலமைச்சரும், தி.மு.க. கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட தி.மு.க கட்சியின் 75வது ஆண்டு பவள விழாவிற்கான சின்னத்தினை வெளியிட்டார்.
அகில இந்திய அலுவல் மொழி மாநாடு ஆனது இந்தி தினத்தன்று அன்று புது டெல்லியின் பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இராஜ்பாஷா கீர்த்தி விருது ஆனது நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நைப் நிறுவனத்தின் துணை நிறுவனமான நைப் ஸ்பேஸ் (NSPL), இந்தியாவின் முதல் பல்லுணர்வு கொண்ட, அனைத்து வானிலையிலும் செயல்படக்கூடிய, அதிகளவிலான மறு ஆய்வு புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் தொகுதியை நிறுவுவதற்கான தனது தொலைநோக்குத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு BRICS இலக்கிய மன்றம் ஆனது, ரஷ்யாவின் கசான் நகரில் "புதிய நடைமுறையில் உலக இலக்கியம்: மரபுகள், தேசிய விழுமியங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பேச்சுவாரத்தை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகமானது, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வரி செலுத்துதல், சுகாதாரம், கல்வி மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளுக்கான ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலியின் (UPI) பரிவர்த்தனை வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, இளம் பருவத்தினர் மத்தியில் குரங்குக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான முதல் அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.