TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 7 , 2018 2274 days 715 0
  • கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வியாளர்களுக்கிடையேயான ஊடாடல்கள் போன்றவற்றில் இருநாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பானும் குஜராத்தும் கையெழுத்திட்டுள்ளன.
  • தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தெலுங்கானாவின் முதல் மாநில சட்டசபையானது அதன் காலவரம்பு முடிவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே கலைக்கப்பட்டது. இது மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு வழி வகுக்கும்.
  • டாக்டர். பூனம் சிங் அவர்கள் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குனராக இரண்டாவது முறையாக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பிராந்திய இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவராவார்.
  • ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural infrastructure Development Fund - RIDF) கீழ் மேற்கு வங்கத்திற்கு ரூ.335 கோடி தொகையை விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கியானது (NABARD – National Bank for Agriculture and Rural Development) ஒதுக்கியுள்ளது.
    • இது 158 சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் 23 வெள்ளப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
  • உலகில் மிகவும் மதிப்புமிக்க கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஃபிபா (FIBA - International Basketball Federation) 3 x 3 (சர்வதேசக் கூடைப்பந்து சம்மேளனம்) வேர்ல்டு டூர் மாஸ்டர்ஸ் போட்டியை இந்தியா நடத்தவிருக்கிறது.
  • மகாத்மா காந்தியின் உருவச் சிலையை சோபியாவின் சவுத் பார்க் என்ற இடத்தில் இந்திய ஜனாதிபதியும் பல்கேரிய அதிபரும் இணைந்து திறந்து வைத்தனர்.
  • கென்யாவின் மராலால் நகரில் 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒட்டகப் பந்தயம் நடைபெற்றது. இது, உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டியாளர்களை ஈர்க்கக் கூடிய மிகவும் மதிப்புமிக்க மற்றும் கென்யாவின் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாகும்.
  • BSNL நிறுவனம் இந்திய குத்துச்சண்டை வீரர்C. மேரிகோமை இரண்டு வருடங்களுக்குத் தனது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
  • இந்தியாவும் பல்கேரியாவும் முதலீடு, சுற்றுலாத்துறை, அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் சோபியா பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பயிற்சியை ஆரம்பித்தல் போன்ற விவகாரங்களின் மீது   புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய இரயில் துறையில் மின்னணுப் போக்குவரத்து (Electric Mobility) என்ற தலைப்பிலான மாநாடு டெல்லியில் நிதி ஆயோக்குடன் இணைந்து இரயில்வேயின் மின்சாரப் பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலமாக மத்திய இரயில்வே அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  • இந்தியா முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அடோப் டிஜிட்டல் திஷா என்ற திட்டத்தை ஆரம்பிக்க மென்பொருள் வல்லுநரான அடோப் நிறுவனம் திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்திய கடற்படைக்கு ஏழு நீண்டதூர தரையிலிருந்து ஆகாயத்திற்கான ஏவுகணைகளை தயாரித்து அளிப்பதற்கான 9200 கோடி ரூபாய் மதிப்பிலான வாய்ப்பை அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
  • இந்தியா, ஜப்பானிடமிருந்து 7000 கோடி ரூபாய் மதிப்பிலான 18 புல்லட் இரயில்களை வாங்கவிருக்கின்றது. இந்த ஒப்பந்தம், இரயில்களை உள்ளூரில் தயாரிக்க உதவும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உத்தரவாதத்தையும் கொண்டிருக்கும்.
    • இது 2022ம் ஆண்டிற்குள் நாட்டின் முதல் உயர்வேக இரயில் பாதையை நிறுவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தை ஒரு திறந்த முறைத் திட்டமாக மாற்ற முடிவெடுத்துள்ளது. மேலும் மக்கள் வங்கி கணக்குகளை துவக்குவதை ஊக்குவிக்கும் வகையில் மேலும் பல சலுகைகளை இதில் சேர்த்துள்ளது.
    • அரசு மிகைப்பற்று வசதியை ரூபாய் 5000லிருந்து 10,000 ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்