TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2024 7 days 55 0
  • தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த, பாரத ஸ்டேட் வங்கியானது 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு ₹1.37 கோடியை வழங்கியுள்ளது.
  • 3 நாள் அளவிலான 4வது உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு (RE-INVEST) 2024 ஆனது குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.
  • தைபூன் பெபின்கா (ஜப்பானால் பெயரிடப் பட்டது) எனும் ஒரு அதி சூறாவளியானது ஷாங்காயில் கரையைக் கடந்தது என்பதோடு இது 1949 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மிகப்பெரிய நகரத்தைத் தாக்கிய மிகவும் வலிமையான ஒரு புயலாகும்.
  • INDUS-X உச்சிமாநாட்டின் மூன்றாவது பதிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.
  • UNEP அமைப்பின் அறிவியல் ஆய்வு மதிப்பீட்டு அறிக்கையானது, உலகளாவியப் படை அடுக்கு மண்டல ஓசோன் 2040 ஆம் ஆண்டில் 1980 ஆண்டில் இருந்த நிலைகளுக்குத் திரும்பும் என்று கணித்துள்ளது.
  • பிரேசிலில் நடைபெற்ற G20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தின் போது அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் இந்தியா இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்