TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 21 , 2024 6 days 40 0
  • இந்திய அரசு ஆனது இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியை (NaBFID) “பொது நிதி நிறுவனம்” ஆக அறிவித்துள்ளது.
  • இந்திய நோய்த் தடுப்பியல் (IIL) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) ஆகியவை நாட்டின் முதல் முக்குறிய படியெடுத்து வலுவிழக்கச் செய்யப்பட்ட ஜிகா வைரஸ் கொண்ட தடுப்பூசியினை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்திட்டுள்ளன.
  • புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியியல் கல்வி நிறுவனம் ஆனது, மலப்புரம் மாவட்டத்தில் ஒருவரின் மரணத்திற்கு நிபா நோய்த் தொற்றுதான் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது என்ற நிலையில் இது கொடிய விலங்குவழித் தொற்று நோயின் மறுதொடக்கத்தினைக் குறிக்கிறது.
  • OpenAI நிறுவனமானது சமீபத்தில் மேம்பட்ட பகுத்தறிவு திறன் கொண்ட o1 மற்றும் o1-குறு மாதிரிகள் எனப்படுகின்ற இரண்டு புதிய ChatGPT மாதிரிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • உயிரி தொழில்நுட்பத் துறையானது 4வது உலகளாவிய உயிரி-இந்தியா 2024 என்ற ஒரு மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
  • இராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) நிறுவனத்திற்குத் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பு - பசுமை வணிக மையத்தின் (CII-GBC) தேசிய ஆற்றல் தலைமத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • 30வது உலக ஓசோன் தினத்தையொட்டி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை அமைச்சகம் ஆனது, “மாண்ட்ரீல் நெறிமுறை: பருவநிலை நடவடிக்கைகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான ஒரு பேச்சுவார்த்தையினை ஏற்பாடு செய்தது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, ஜோராவர் எனப்படும் இந்திய இலகு ரக பீரங்கியின் முதல் கட்ட மேம்பாட்டுக் களம் சார்ந்த பீரங்கி வேட்டு சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்