இந்திய அரசு ஆனது இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியை (NaBFID) “பொது நிதி நிறுவனம்” ஆக அறிவித்துள்ளது.
இந்திய நோய்த் தடுப்பியல் (IIL) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) ஆகியவை நாட்டின் முதல் முக்குறிய படியெடுத்து வலுவிழக்கச் செய்யப்பட்ட ஜிகா வைரஸ் கொண்ட தடுப்பூசியினை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்திட்டுள்ளன.
புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியியல் கல்வி நிறுவனம் ஆனது, மலப்புரம் மாவட்டத்தில் ஒருவரின் மரணத்திற்கு நிபா நோய்த் தொற்றுதான் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது என்ற நிலையில் இது கொடிய விலங்குவழித் தொற்று நோயின் மறுதொடக்கத்தினைக் குறிக்கிறது.
OpenAI நிறுவனமானது சமீபத்தில் மேம்பட்ட பகுத்தறிவு திறன் கொண்ட o1 மற்றும் o1-குறு மாதிரிகள் எனப்படுகின்ற இரண்டு புதிய ChatGPT மாதிரிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
உயிரி தொழில்நுட்பத் துறையானது 4வது உலகளாவிய உயிரி-இந்தியா 2024 என்ற ஒரு மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
இராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) நிறுவனத்திற்குத் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பு - பசுமை வணிக மையத்தின் (CII-GBC) தேசிய ஆற்றல் தலைமத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
30வது உலக ஓசோன் தினத்தையொட்டி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை அமைச்சகம் ஆனது, “மாண்ட்ரீல் நெறிமுறை: பருவநிலை நடவடிக்கைகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான ஒரு பேச்சுவார்த்தையினை ஏற்பாடு செய்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, ஜோராவர் எனப்படும் இந்திய இலகு ரக பீரங்கியின் முதல் கட்ட மேம்பாட்டுக் களம் சார்ந்த பீரங்கி வேட்டு சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.