TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 22 , 2024 5 days 38 0
  • இந்திய அரசானது, 9வது பங்குதாரர்கள் மாநாட்டு வாரியத்தின் 2வது அதிகாரப்பூர்வ கூட்டத்தையும், ஊக்கமருந்துக்கு எதிரான யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச உடன்படிக்கையின் கீழான நிதி ஒப்புதல் குழுவின் 3வது அதிகாரப்பூர்வக் கூட்டத்தையும் புது டெல்லியில் நடத்தியது.
  • இந்திய விமானப்படையானது, ஓமனில் உள்ள விமானப்படைத் தளமான மசிராவில் நடைபெறும் ஈஸ்டர்ன் பிரிட்ஜ் VII பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இந்திய மற்றும் ஓமன் நாட்டு இராணுவப் படைகள் ஆனது ஓமனில் நடைபெறும் அல் நஜா-V எனப்படும் இருதரப்புப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • மகாராஷ்டிராவில் உள்ள 434 தொழில்பயிற்சி நிறுவனங்களில் (ITI) உள்ள தொழிற் முறைப் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 'அரசியலமைப்புக் கோயிலை' இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
  • இந்தியாவின் அன்மோல் கர்ப் (17), பெல்ஜிய சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸை வீழ்த்தி தனது முதல் சர்வதேசப் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்