தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இராணுவத்தின் தெற்குப் படைப் பிரிவு ஆகியவை இரண்டு நாட்கள் அளவிலான தேசியக் கருத்தரங்கமான AIKYA பயிற்சியினை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளன.
கடற்பாசிச் சாகுபடிக்கான சிறந்த மையமாக இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தினை மீன்வளத் துறை நியமித்துள்ளது.
ஒரு நாளைக்கு 1.4 டன் உற்பத்தித் திறனுடன் கூடிய CO2 வாயுவிலிருந்தது மெத்தனால் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் ஆலையானது மகாராஷ்டிராவின் புனேவில் திறக்கப் பட்டுள்ளது.
இந்த மாற்று முறை உற்பத்தியானது மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற தொழில் துறை மூலங்களிலிருந்து அல்லது நேரடியாக காற்றில் இருந்து கார்பன் வெளியேற்றத்தைப் பற்றுகிறது.
ஸ்வச் பாரத் திட்டத்தின் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஸ்வச்சதா ஹி சேவா 2024 பிரச்சாரம் ஆனது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02 ஆம் தேதி வரை நடைபெறுகிது.
இந்த ஆண்டிற்கான இந்தப் பிரச்சாரத்தின் கருத்துரு, “ஸ்வபாவ் ஸ்வச்சதா - சன்ஸ்கார் ஸ்வச்சதா” என்பதாகும்.