TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 25 , 2024 3 days 65 0
  • இந்தியாவின் கடல்சார் துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன் 20வது கடல்சார் அரசு மேம்பாட்டுச் சபை (MSDC) ஆனது கோவாவில் நடைபெற்றது.
  • இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகங்கள், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றினை போன்றே மிகவும் முழு ஈடுபாட்டுடன் கூடிய ஊடாடும் உருவ படைப்பாளர்களுக்கான புதியதொரு இந்தியக் கல்வி நிறுவனத்தினை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியக் கடற்படையின் லெப்டினன்ட் கொமடோர் A.ரூபா மற்றும் லெப்டினன்ட் கொமடோர் K.தில்னா ஆகியோர் விரைவில் இரண்டாவது நாவிகா சாகர் பரிக்கிரமா பயணத்தின் ஒரு பகுதியாக INSV தாரிணி என்ற கப்பலில் 'சிறப்புப் பயணத்தினை' தொடங்க உள்ளனர்.
  • 2024 ஆம் ஆண்டு ஷார்ஜா முதலீட்டு மன்றத்தில் (SIF) செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் உலகின் முதல் வர்த்தக உரிமச் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (DDWS) ஆனது 2024 ஆம் ஆண்டு சர்வதேச WASH (தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
  • சீனா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து ‘மௌண்ட் எவரெஸ்ட் பிரண்ட்சிப் 2024’ எனப்படும் 10 நாட்கள் அளவிலான கூட்டுப் பயிற்சியினை சீனாவின் சோங்கிங் நகரில் நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்