TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2024 17 hrs 0 min 11 0
  • தமிழ்நாடு மாநிலமானது தஞ்சாவூரிலும் (டெல்டா பகுதியில் அமைக்கப்படும் முதல் பூங்கா) சேலத்திலும் டைடல் எனப்படும் இரண்டு தொழில்நுட்பப் பூங்காக்களைத் திறக்க உள்ளது.
  • மகாராஷ்டிராவின் அமராவதியில் அமைக்கப்பட உள்ள பிரதம மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்திப் பகுதிகள் மற்றும் ஆடை உற்பத்திப் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் .
  • இரண்டாவது உலகளாவிய உணவுக் கட்டுப்பாட்டாளர்கள் உச்சி மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • 14வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியானது சண்டிகரில் நடைபெற்று வருகிறது.
  • டாடா எஃகு உற்பத்தி நிறுவனமானது ஓடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலிங்க நகரில் இந்தியாவின் மிகப்பெரிய ஊதுலையை நிறுவி மிக வெற்றிகரமாக இயக்கத் தொடங்கியுள்ளது.
  • இராஜஸ்தானில் உள்ள மஹி பன்ஸ்வாராவில் நான்கு 700 மெகாவாட் அணு மின் உலைகளை உருவாக்குவதற்காக NPCIL மற்றும் NTPC நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ள ஒரு கூட்டு முயற்சிக்கு (ASHVINI) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவின் மூன்றாவது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட அணுசக்தி உலையானது செயல்பாட்டு நிலைக்கு வந்துள்ளது என்பதோடு மேலும் அந்த உலையில் வணிகரீதியான மின் உற்பத்திச் செயல்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளன.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது, தொற்றா நோய்கள் மற்றும் மனநலம் ஆகியவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் பல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்ட சாதனைகளுக்காக 2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பல் முகமை இடையீட்டு நடவடிக்கை அமைப்பு விருதைப் பெற்றுள்ளது.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது இயங்கலை ஒளிபரப்புச் சேவை (OTT) இயங்கு தளங்களில் "தவிர்க்க முடியாத வகையிலான" புகையிலை எதிர்ப்பு சுகாதார குறியீடுகளை குறைந்தபட்சம் 30 வினாடிகளுக்கும், புகையிலைப் பயன்பாட்டின் தீய விளைவுகள் குறித்த ஒலி-ஒளி சார்ந்த பொறுப்புத் துறப்புகளை 20 வினாடிகளுக்கும் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.
  • இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அல்லது குவாட் உச்சி மாநாட்டினை அமெரிக்கா சமீபத்தில் நடத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்