TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2024 56 days 81 0
  • இந்திய அரசானது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக ஒலி-ஒளி & பொழுது போக்கு உச்சி மாநாட்டை (WAVES) நடத்த உள்ளது.
  • 19வது திவ்ய கலா மேளா ஆனது சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது.
  • இஸ்ரோ, இன்-ஸ்பேஸ் மற்றும் NSIL ஆகியவை அரசு சாரா நிறுவனங்களுடன் (NGO) 75 தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களில் (TTA) கையெழுத்திட்டுள்ளன.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, கிராஃபீன் அரோரா திட்டத்தின் (GAP) கீழ் இந்தியா கிராஃபீன் பொறியியல் மற்றும் புத்தாக்க மையத்தினை (IGEIC) தொடங்கியுள்ளது.
  • காசிரங்கா மற்றும் அசாமில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் பிற பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் இந்த தாவரஉண்ணி இனங்களின் வேட்டையாடல் நிகழ்வில் 86% வீழ்ச்சிப் பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தி ஆலையை அமைக்கச் செய்வதில் இணைந்து பணியாற்றுவதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, 46 ஆண்டுகாலத் தொழில்முறை வாழ்க்கை, 537 பாடல்கள் மற்றும் 24,000 நடன அசைவுகளுடன் கின்னஸ் உலக சாதனையைப் படைத்து, மிகவும்  தொழில்சார் ஆக்கப்பூர்வமான  இந்திய திரைப்பட நட்சத்திரமாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளார்.
  • இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங் ஜார்ஜியாவின் திபிலிசி நகரில் நடைபெற்ற காமா சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் தனது முதல் போட்டியில் MMA (கலப்பு தற்காப்புக் கலை) போட்டிப் பிரிவில் வென்று வரலாறு படைத்துள்ளார்.
  • இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களான ஒலெக் கோனோனென்கோ மற்றும் நிகோலாய் சப் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 374 நாட்கள் தங்கி இருந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.
    • கோனோனென்கோ விண்வெளியில் 1,111 நாட்கள் சுற்றுப்பாதையில் அதிக நேரம் செலவழித்த நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்