TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 29 , 2024 15 hrs 0 min 6 0
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி D.கிருஷ்ணகுமார், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்ற உள்ள R.பூர்ணிமா, M.ஜோதிராமன் மற்றும் அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளீட் ஆகிய மூன்று நீதித்துறை அதிகாரிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஆனது பின்னணிப் பாடகி P.சுசீலாவிற்கும் கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
  • லண்டனின் ஹைட் பூங்கா போன்ற குறைந்த பராமரிப்பு தேவை கொண்ட நகர்ப்புறப் பூங்காவை கிண்டியில் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்திய அறிவியலாளர்கள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெளியீட்டு விகிதத்துடன் கூடிய சீரான பெரோமோன் மருந்து தெளிப்பானை உருவாக்கியுள்ள நிலையில் இது பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை செலவினங்களைக் கணிசமாகக் குறைப்பதற்காக ஒரு புதுமையான தீர்வாக விளங்கும்.
  • சர்வதேச செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி மற்றும் நெறிமுறை மையமானது (ICAIRE) யுனெஸ்கோ அமைப்பின் கீழான இரண்டாம் வகை (C2) மையமாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • கிரண் ராவ் இயக்கிய லாபட்டா லேடீஸ் ("Missing Women") 97வது அகாடமி விருதுகள் அல்லது ஆஸ்கார் விருதுகளில் மிகவும் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரையாக முன் வைக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா (54) பதவியேற்றுள்ளார்.
    • இவர் இலங்கையின் பிரதமர் பதவியை வகிக்க உள்ள இலங்கையைச் சேர்ந்த மூன்றாவது பெண் அரசியல்வாதி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்